2 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் திறன் உள்ள ‘ரோபோ’ !

டெர்மினேட்டர், எந்திரன் போன்று மனித உருவிலான ரோபோவை உருவாக்கியுள்ளனர் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள். மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவும், தொழிற்சாலைகளில் மனித இழப்புகளை குறைப்பதற்காகவும், கடினமான வேலைகளை செய்யவும் ரோபோக்கள்  உருவாக்கப்படுகின்றன.

robot-suitsஉலகில் பல்வேறு விதமான வடிவங்களில் ரோபோக்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மனித வடிவிலான ரோபோ மிகப்பெரிய சாதனை என்றே விஞ்ஞான உலகில் கொண்டாடப்படுகிறது.

டெர்மினேட்டர் ஹாலிவுட் படத்தில் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் இயந்திர மனிதனாக நடித்திருப்பார். அதுபோன்ற அமைப்பிலான மனித ரோபோ ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.தனது உடலில் காயங்களோ அல்லது கோளோரோ ஏற்பட்டால் அதை அந்த ரோபோவே 2 மணி நேரத்தில் சரி செய்து கொள்ளும் திறன் படைத்தது.

தாங்கள் உருவாக்கிய இந்த ரோபோவை ரேஷர் பிளேடால் 2 துண்டுகளாக வெட்டி போட்டனர். ஆனால் 2 மணி நேரத்தில் அதை தானே ‘ரோபோ’ சரி செய்து ஒட்டிக்கொண்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது மிமெடிக் என்ற உலோக கலவையினால் ஆனது. இந்த உலோக கலவையை எலெக்ட்ரிக் பொருட்கள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் உதிரி பாகங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும்.

இந்த ரோபோ பலம் வாய்ந்த எந்திரன் என்று கூறும் விஞ்ஞானிகள் மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறியுள்ளனர்.

‘எந்திரன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரோபோவாக நடித்து இருப்பார். அந்த ரோபோவிற்கு உணர்ச்சிகளை ஏற்படுத்துவதன் மூலம், கோபம், காதல் போன்ற உணர்வுகள் ஏற்படுவதைப் போல செய்திருப்பார். ஆனால் ஸ்பெயின் விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோ தொழிற்சாலைகளில் பணிபுரியும், காதலிக்க எல்லாம் தெரியாது… ஐஸ்வர்யா மாதிரியான பெண்ணைப் பார்த்தாம் முத்தமெல்லாம் கேட்காதாம்.

Related posts:

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி புதிய சாதனை: 849 கிமீ தூர அரேபிய பாலைவனத்தை அதிவேகத்தில் கடந்தது
ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி?
‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை
1,126 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் இவ்வளவு பெரியதாகவும் மாறும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை; மார்க் ஜுகெர்பர்க்
இந்திய விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயாராகும் இஸ்ரோ!
ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாட்ஸ்ஆப்பை ஏன் வாங்கியது
சூரியனுக்கு ஆதித்யா என்ற செயற்கை கோளை இஸ்ரோ அனுப்ப திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

சினிமா